திப்பு சுல்தான் கொங்கு நாட்டு சைவ வைணவ கோயில்களுக்கும் கொடை அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மின்னல்கல்லில் ஒரு பார்ப்பனர் அக்ரஹாரம் உள்ளது. அப்பகுதிக்கு உத்தண்ட மல்ல சமுத்திரம் என்று பெயர். அங்கு பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. தந்தை காலத்திலேயே அவ்வூருக்கு வந்த திப்பு சுல்தான் பகதூர் அவர்கள் அக்கோயிலுக்கு ஜோடி கை மானியமாக 575 ராஜகோபால வராகன் கொடை அளித்ததாக அக்கோயில் கல்வெட்டு கூறுகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் குன்னத்துறை அடுத்துள்ள குறிச்சி என்ற ஊரில் செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. கோவில் வழிபாட்டுக்காகவும் பூசாரிகள் நலத்திற்காகவும் திப்பு சுல்தான் கொடை வழங்கியுள்ளார். கருப்பு கேன்வாஸ் துணியில் கன்னடத்தில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்ட அந்த ஆவணம் மைசூரில் இந்திய கல்வெட்டுத் துறையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் கே.வி. ரமேஷ் வசம் உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் திப்பு செட்டிபாளையம் என்ற ஊர் உள்ளது. ஜம்பையில் கிடைத்த பாடல் ஒன்றில் அவ்வூர் திப்பு செட்டிபாளையம் என்று எழுதப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் தொடர்பை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
முனைவர் செ .இராசு
தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்
திப்பு சுல்தானின் கொடைப் பெற்ற கொங்கு நாட்டு கோயில்கள் :
