தென்னகத்துப் புலியாம் திப்பு கல்தான், 17 ஆண்டு அரசாட்சியில் (கி.பி. 1782-1791) தென்னக நாணய வரலாற்றில், கலை நயம் மிளிர தங்கம், வெள்ளி, செம்பால் அமைந்த 16 வகையான கவின்மிகு காசுகளை தென்னிந்தியா வெங்கும் அன்றாடு நற்காசுகளாகக் செலாவணிக்கு ஈந்த மாமன்னராவார். சிங்கம் எனப் பெயர் பெற்ற ஹைதர் அலி, இக்கேரி அரசர்கள் வழங்கிய “பார்வதி பரமசிவன்” திருவுரு பொறிக்கப் பெற்ற வராகன் காசுகளைப் போன்றுத் தாமும் பொறித்து வழங்கிய அவ்வராகன் காசுகளை போன்ற காசுகளை அவர் மைந்தர் திப்புவும் தன் ஆட்சியின் துவக்க காலத்தில் சுல்தானி வராகனாக மக்களுக்கு வழங்கினார் என நாணயவியலாளர் கூறுவர்.
பின்னர் தன் ஆட்சியின் இறுதிக்காலம் வரை தங்க மொஹாரக்களையும், பணத்தையும், வெள்ளியில் ரூபாய் நாணயங்களையும், செம்பில் ஆனைத் துட்டுகள், காசுகளையும் நாணயசாலைகளில் அச்சடித்துச் செலவாணிக்குத் தென்னகத்தில் உலாவரச் செய்தவர் தீரன் திப்பு சுல்தானாவார்.
தாம் வெளியிட்ட செம்புக் காசுகளில் இந்து மாமன்னர்களின் மேலாண்மைச் சின்னமான யானைச் சின்னத்தைக் கலைப்பொலிவுடன் நாணயங்களின் முகப்பில் பதியவைத்துத் தம் சமய நல்லிணக்கத்தை உலகிற்குப் புத்தொளி காட்டியவர். திப்புவின் தங்கம், வெள்ளி நாணயங்களில் காணும் திருவாசகம் சமய சம்பந்தமானவையே.
திப்புவின் நாணயங்களில் இரண்டு விதமான ஆண்டுகள் காணப்படுகின்றன. திப்புவின் முதல் நான்காண்டு கால ஆட்சியில் வெளிவந்த நாணயங்களில் “ஹ்ஜரா” ஆண்டும் பின்னர் தம் ஆட்சிக் காலம் முடிய வெளிவந்த நாணயங்களில் முகமது நபி பிறந்த ஆண்டாகிய 571 லிருந்து கணக்கிடப் பெறும் “மவுலுதி” ஆண்டும் அராபிய எண்களில் வலமிருந்து இடமாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.
திப்புவின் நாணயச்சாலைகள்
திப்பு ஆளுகையில் 15-க்கும் மேல் நாணயச்சாலைகள் இருந்தன என நாணயவியல் அறிஞர் பி.எல்.குப்தா நாணயவியல் நூலில் குறிப்பிடுவார். முதல் நாணயசாலை “பட்டன்” என அழைக்கப்படும் சீரங்கபட்டணத்தில் அமைந்திருந்தது.
ஏனைய நாணய சாலைகள்
2. நகர் (பெட்டலூர்) 3. பெங்களூர் 4. கூட்டி (பைஸ்-ஹிஸார்) 5. பரூக்கயா ஹியார் (சித்ரதுர்க்கா) 6. கோழிக்கோடு (காளிகுட்) 7. பரூக்கி (பெரூக்) 8. சலாமாபாத் (சத்தியமங்கலம்) 9. காளிக்குவாபாட் (திண்டுக்கல்) 10. ஐபராபாட் குர்ரம்கொண்ட). 11. கவர்ஸட் -சவாட் (தார்வார்) 12 நஜபார் (மைசூருக்கு அருகில்) 13. பெனாஜீர் (ஹலெ ஹெரானூர்! 14. சாகர் கோட் (சாகர் பட்டன் சிக்மகளூர் மாவட்டம்) 15. அபங்கார் (அபூர்சிட்டால் துர்க்கி மாலட்டம்). இந்த நாணய சாலைகள் அனைத்தும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் அரசியல் நோக்கம் கருதி திப்பு சுல்தானால் நிறுவப்பட்டன. வரலாற்றுச் சான்றுகளுடன் கிடைத்த நாணயங்கள் வாயிலாக 15 நாணய சாலைகளின் பெயர்களை நாம் அறிகிறோம்.
ஒரு சில வராகன் நாணயங்களின் பின்புறம் “ஹுவா அல் கல்தான் அல்-ஆதில்” (அவர்தான் நேர்மையாள சுல்தான்) எனப் பொறிக்கப்பட்டிருக்கின்றது. தம்பெயரை எவ்வகை நாணயங்களிலும் பொறிக்காத மாமனிதராவார் திப்பு சுல்தான்.
செம்புக்காசுகளின் முகப்பில் யானைத் சின்னத்தையும் புறத்தில் சாலையின் பெயரையும் ஆண்டையும் பொறித்துள்ளார்.
முதன்முதலாக திப்புவின் நாணயங்கள் சீரங்கபட்டணம், நகர் ஆகிய இரு சாலைகளில் மட்டுமே அச்சடிக்கப்பட்டன. பொற்காசுகள், வெள்ளி ரூபாய்களில் மட்டுமே தம் தந்தையின் பெயரில் உள்ள முதல் எழுத்தை “ஹெ” என்னும் பர்சிய எழுத்து காசுகளின் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. திப்புவின் ஆட்சி ஆண்டுகள் செம்புக் காசுகளின் முகப்பில் அராபிய எண்களில் இடப்புறமாக அல்லது வலப்புறமாக நிற்கும் யானைச் சின்னத்தின்மேல் பொறிக்கப் பெற்றிருக்கும்.
திப்புவின் நாணயங்களின் பெயர்கள்
பொன் வெள்ளிக்காசுகளின் புறப்பகுதியில் முகமதியத் துறவிகளின் பெயர்களைப் பொறித்துள்ளார். “மொஹர்” தங்கக் காசுகளில் கலிபாக்களின் பெயர்களையும் வெள்ளி ரூபாய்களில் இமாம்களின் பெயர்களும் முத்திரையிடப்பட்டிருக்கின்றன. திப்புவின் இரண்டு பைசாவில் (40 காசு) மட்டும் கலிபாவின் பெயரும் ஏனைய காசுகளில் பர்சிய அல்லது அராபிய வானத்துக் கிதாபுகளின் பெயர்களையும் பொறித்துள்ளார்.
திப்புவின் பொற்காசுகள்
சுல்தானி வராகன், சுல்தான் பணம் எனப் பொற்காசுகளின் பெயர்கள் வழங்குகின்றன. காசுகள் அனைத்தும் வட்ட வடிவம் கொண்டவை: முகப்பும், புறப்பகுதியும் கொண்டவை.
1. அஹ்மாதி: நான்கு வராகன் பொற்காசு, முகமது நபியின் பெயர் கொண்டது. 210 தானியமணி எடை உள்ளது. 0.9” விட்டம் கொண்டது. காசுகள் அனைத்திலும் நாணயசாலைகளின் பெயரும் வெளிவந்த ஆண்டு அராபிய எண்களிலும் பொறிக்கப்பெற்றிருக்கும். நாணயங்களின் இருபுறமும் பர்சிய மொழி வாசகங்கள் இருக்கும் “முகமதுவின் சமயம் ஹைதரின் வெற்றியால் ஒளிமயம் அடைந்தது. பட்டன் நகரில் அச்சிடப் பெற்றது. அஜால் ஆண்டு (38) 1192 “அவரே ஒப்பற்ற சுல்தான், மூன்றாம் பஃஹாரி, ஆஜல் ஆட்சியாண்டு?”
2. சாதிக்கி: இரு வராகன் பொற்காசு, முதல் கலிபா அபுபக்கர் சித்திக்-பெயரைச் சூட்டியுள்ளார் திப்பு.
3. பரூக்கி: ஒரு வராகன், உமர் பரூக் கலிபாவின் பெயர் பெற்றது.
4. பணம்: மிகச்சிறிய பொற்காக, 5 லிருந்து 6 தானிய மணி எடை கொண்டது. 3″ விட்டமுடையது. இச்சிறிய பொற்காசு தென்னக மெங்கும் பெருவாரியாக செலவாணியாக இருந்தது. இக்காசிற்குப் பெயர் ஏதும் சூட்டப் பெறவில்லை! ஹைதரை குறிக்க “ஹெ” என்னும் பர்சிய எழுத்து காசின் முகப்பில் பொறிக்கப் பெற்றிருக்கும்.
சுல்தான் (வெள்ளி) ரூபாய்கள்:
5. ஹைதாரி: இரண்டு ரூபாய். 4 ஆம் கலிபாவின் பெயரால் அமைந்தது. “ஹைதர்” எனில் சிங்கம் என்பது பொருள். அவரது தந்தையும் அப்பெயராலேயே அழைக்கப்பட்டார். 355 தானிய மணி எடை கொண்டது. 1.4” குறுக்களவு கொண்டது.
6. இமாமி: ஒரு ரூபாய். இமாமின் பெயர், 175 தானிய மணி எடை கொண்டது.
7. அபீதி: அரை ரூபாய், 4 ஆம் இமாம் அலி ஜையின் அல் அபிதின் பெயர் கொண்டது. 87 தானிய மணி எடை.
8.பாகிரி: கால் ரூபாய், 5 ஆவது இமாம் முகமது அல் பாகிர் பெயர் பெற்றது. 43 தானிய மணி எடைபெற்றது 0.6” குறுக்களவு கொண்டது.
9. ஐபாரி: அரைக்கால் ரூபாய். 7வது இமாம் காஜ் மித் முசல் அல் காசிம் பெயரால் அமைந்தது. 10 தானிய மணி எடை பெற்றது.
10. கைஜிரி: 1/32 ரூபாய். சிறிய வெள்ளிப் பணம் “அல் கைஜர்” பெயர் பெற்றது. 5 தானிய மணி எடை உள்ளது. ஆட்சியாண்டும் காசின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்
செம்புக்காசுகள்: யானைத்துட்டு, யானைக் காசுகள் என மக்களால் அழைக்கப்பட்டன.
11. உத்மானி அல்லது முஸ்தாரி: இரண்டு பைசா (40 காசு) 3 ஆம் கலிபா உத்மான் பெயர் சூட்டப் பெற்றது. 1218 லிருந்து 1220 வரை வெளிவந்த காசுகள் ”உத்மான்” பெயராலும் 1221 லிருந்து இறுதி வரை வெளிவந்த இரண்டு பைசாக்கள் “முஸ்திரி” என்றும் அழைக்கப்பட்டன. “முஸ்திரி” என்னும் அராபியப் பெயர் ஜுபிடருக்குரியது. காசின் முகப்பில் துதிக்கையை உயர்த்தியுள்ள யானையின் மேல் கொடியும், வலப்புறத்தே அரேபிய எண்களில் ஆண்டும் பொறிக்கப் பெற்றிருக்கும். காசின் புறத்தே பெயரும் நாணயசாலையின் பெயரும், மவுலுதி ஆண்டும் பொறிக்கப் பெற்றிருக்கும் 350 தானிய மணி எடை கொண்டது. 12″ குறுக்களவு கொண்டது.
12. ஜொஹ்ரா: ஒரு பைசா (20 காக), வீனஸ்ஸின் பர்சிய மொழிப் பெயர். 175 தானிய மணி எடை கொண்டது.
13. பஹ்ரம்: அரைப்பைசா (10 காசு). “மார்சு” கிரகத்தின் பெயரைச் சூட்டியுள்ளார். 87 தானிய மணி எடை பெற்றது.
14. அக்தர்: கால் பைசா 5 காசுல ஒரு நட்சத்திரத்தின் பர்சிய மொழிப்பெயர். 42 தானிய மணி எடை உள்ளது.
15. குதூப்: அரைக்கால் பைசா 121/2 காக) அராபி மொழியில் துருவநட்சத்திரத்தின் பெயர். 21 தானிய மணி எடை உடையது. 0.4” குறுக்களவு கொண்டது இரண்டு பைசாவிலிருந்து, அரைக்கால் பைசா வரை 5 பகுப்புடைய செம்புக்காசுகளை திப்பு வெளியிட்டுள்ளார். காசுகளின் முகப்பில் யானைச் சின்னம் கொடியுடன் பொறிக்கப் பட்டிருக்கும். இந்த யானை பாய்ந்து செல்லும் கோலத்துடன் இடம் அல்லது வலமாகக் காசுகளில் பதிக்கப்பட்டிருக்கும். சில காசுகளில் யானை துதிக்கையை உயர்ததியுள்ளது போல் அச்சடிக்கப் பெற்றிருக்கும். நாணயத்தின் புறத்தில் சாலையின் பெயரும் வெளிவந்த ஆண்டும் பொறிக்கப் பெற்றிருக்கும்!
திப்பு சுல்தான் தன் ஆட்சியில் 15 நாணய சாலைகளில் சுல்தானி வராகன், சுல்தானி பணம், சுல்தானி ரூபாய், சுல்தான் யானைத்துட்டு, யானைக் காசுகள் முதலான 16 பிரிவுடைய பொன், வெள்ளி, செம்பு உலோகங்களால் அமைந்த நாணயங்களை அச்சடித்து தென்னகமெங்கும் செலாவணிக்கு வழங்கியவர்.
திப்புவின் மொஹ்ர்: தம் தந்தையாரைப் போல வராகன் காசுகளைத் தொடக்க காலத்தில் வழங்கிப் பின்னர் 5 ஆம் ஆண்டு முகலாயர் பாணியில் 4 வகை தங்க “மொஹராக்களை” வெளியிட்டார்.
அஹாமதி: 4 வராகன் கொண்டது. பொற்காசு. சீரங்கபட்டணம், நகர் நாணய சாலையில் வெளிவந்தவை. வராகன் பொற்காசுகள் தார்வாரிலும், திப்புவின் பணம் நகர், சீரங்கபட்டணம், தர்வார், காளிகட், பரூக்கி, திண்டுக்கல் நாணயசாலைகளில் அச்சடிக்கப் பெற்றன.
“அஹாதி” மொகராவின் முகப்பில் “ஹெ” என்னும் பர்சிய எழுத்தும் நாணயசாலையின் பெயரும் உடன் இருக்கும். காசின் புறத்தில் “அவரே சுல்தான்” ஹிஜிரா ஆண்டு. அராபிய எண்ணுடன் பொறிக்கப்பட்டிருக்கும் 2-ம் வகை அஹாமதி பட்டன், நகர் சாலைகளில் (1215-லும்) தர்வாரில் (1216-லும்) பொறிக்கப் பெற்றது. காசின் புறத்தில் “முகமது” என்னும் திருப்பெயர் “அவரே சுல்தான்” என்னும் திருவாசகத்தின் முன் பொறிக்கப் பெற்றிருக்கும்.
ஆம் வகை பொற்காசில் பட்டன் நாணயசாலையிலும், 1216 லிருந்து 1223 வரை நகர் சாலையில் (1216, 1217) ஆண்டுகளிலும், குவூர்செட் சாவாட்டில் 1217,1218) ஆண்டுகளிலும் அடிக்கப் பெற்றன. நாணயத்தின் புறத்தில் “ஒப்பற்ற” என்ற வாசகமும் உடன் பதிக்கப் பெற்றிருந்தது.
திப்புவின் பணம்: இச்சிறிய பொற்காசு பற்றி முன்னரே பார்த்தோம். பத்துப்பணம் கொண்டது ஒரு சுல்தான் வராகனாகும். முகப்பில் ‘ஹெ’ என்னும் எழுத்து முத்துவரிசை வட்டத்திற்குள் பொறிக்கப்பட்டிருக்கும்.
வெள்ளி ரூபாய்கள்: 7 பிரிவுடைய வெள்ளிக் காசுகளை வெளியிட்டார். வெள்ளி நாணயங்களின் வட்டவிளிம்பில் பள்ளங்கள் வெட்டப் பெற்றிருக்கும்.
செம்புக் காசுகள்: 5 பிரிவுடைய செம்புக்காசுகளைத் தந்தார். துவக்க கால செம்புக் காசுகளில் யானைச் சின்னத்தை காசின் முகப்பில் இடப்புறமாகவும், பின்னர் வெளியிட்ட காசுகளில் யானைச் சின்னத்தை காசின் முகப்பில் வலப்பக்கமாகவும் பொறித்து புறத்தில் நாணய சாலையின் பெயரையும், காசின் பெயரையும் பொறித்துள்ளார். காசுகள் வெளிவந்த ஆண்டை யானையின் மேல் பொறித்துள்ளார்.
சிருங்கேரி பீடத்தின் மேல் திப்பு சுல்தானின் ஈடுபாடு: திப்புவின் மத நல்லிணக்கத்துக்குச் சான்று கூறும் வகையில் சிருங்கேரி மடத்தில் சாரதா தேவியின் திரு உருவத்தைப் புதிதாக எழுப்பிய கோயிலில் எழுந்தருளச் செய்த போது, அணி அலங்காரத்துடன் கிளியுடன் அமைந்த சாரதாதேவியின் திருவுருவம் முகப்பில் பொறிக்கப் பெற்ற 200 பொற்காசுகளை சிருங்கேரி பீடத்திற்குக் காணிக்கையாகக் செலுத்தினார் திப்பு கல்தான். காசின் புறத்தில் காசின் பெயரையும், நாணயசாலையின் பெயரையும் பொறித்து வெளியிட்ட “ரஆதி” (Rahati) பொற்காக என்றென்றும் திப்புகல்தானின் புகழ் பாடும்.
(Studies in Karnataka Numismatics – by Dr. A.V. Narasimhamurthy) P 79-80)
பேராசிரியர் க. ஆ. திருஞானசம்பந்தம்
இயக்குனர்,
கொங்கு நாணவியல் ஆய்வு மையம், ஈரோடு – 3
