நல்லிணக்க நாயகர்கள்-1

2 Min Read

முருகன் கோயிலுக்குத் தோப்பு அளித்த ராவுத்தர்கள்

வரலாற்றுத் தகவல்

  • இடம்: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், சென்னை – புதுவை கடற்கரைச் சாலையில் உள்ள இடைக்கழி அருகில் இருக்கும் நயனார் குப்பம் பேருந்து நிலையத்திலிருந்து  கி.மீ. தூரத்தில் உள்ள தோப்பில் நடப்பட்ட தூண்.
  • காலம்: விஜயநகர மன்னர் மூன்றாம் ஸ்ரீரங்க தேவமகாராயர் காலம் (1642–1655), கி.பி. 1645 : தாரண வருடம்.
  • செய்தி: விஜயநகர மன்னர் காலத்தில் அப்பகுதியை வெங்கலப்ப நாயக்கர் நிர்வாகம் செய்து வந்தார். அவரது அலுவலர் குயீசனா ராவுத்தர். அவரது புண்ணியமாக நயனார் குப்பத்தை அமரக் கிராமமாகப் பெற்றிருந்த தெகனா ராவுத்தர், நல்லன் ராவுத்தர், அல்லி ராவுத்தர், கான் ராவுத்தர் ஆகிய நால்வரும் அருகில் செய்யூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குத் தென்னை, மா, பலா மற்றும் பல மரங்கள் அடங்கிய தோப்பு ஒன்றை கொடையாக அளித்தனர். அந்நிலமும் குடிகளும் கொடையாகக் கொடுக்கப்பட்டன.
  • எச்சரிக்கை: இதற்குத் தீங்குச் செய்தவர்கள் தாய், தகப்பன், குரு, கங்கைக்கரையில் காராம் பசுவையும் கொன்ற பாவம் அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
  • தூண் அமைப்பு: தூண்  அடி உயரமுள்ளது. தூணின் உச்ச வளைவாய் கிணறு அல்லது ஏற்றத்தின் தூணாக இருக்கலாம்.

கல்வெட்டு வரிகள்

  1. தாரண வரு
  2. ஷம் பங்கு
  3. னி மாதம் 25
  4. தேதி ஸ்ரீமந் ம
  5. கா மண்ட
  6. லேசுபர சீர
  7. ங்கராயர் தே
  8. வமகாராய
  9. ர் அவர்கள் ரா
  10. ச்சியம் பண்ணு
  11. கையில்
  12. சுவாமிக்கு
  13. வெங்கலப்பனா
  14. யக்கர் சீர்மை ந
  15. குருமுகொண்
  16. டாக் கந்தவாலத்து
  17. குயீசன ராவுத்தர்
  18. புண்ணியமாக் செ
  19. றகனா ராவுத்தர் ந
  20. ல்லன் ராவுத்த
  21. ர் அல்லி ராவுத்
  22. தர் கான் ராவுத்
  23. தர் இவர்கள் நா
  24. லு பேரும் சே
  25. ர்ந்து வட்ட
  26. தன்மம் எ
  27. ங்கள் அ
  28. மரக் கிராமம் நய
  29. னார் குப்பத்
  30. தில் –
  31. ர் மக
  32. மானியத்
  33. துக்குத்
  34. தோப்பு தெ
  35. ன்ன மரமும்
  36. மா மரம்பலா
  37. மரம் மற்றும் உ
  38. ள்ள பல வருஷ்
  39. ஷமும் நலமு
  40. ம் தோத்தத்
  41. தேயருக்கு
  42. அற குடியும்
  43. செய்யூர் கந்தகவா
  44. மியாற்கு சறுவ
  45. மான்யமாகச் சந்
  46. தராதத்த வ
  47. ரைக்கும் கட்ட
  48. ளையட்டோ
  49. ம் வந்த தன்மத்
  50. துக்கு ஆதமொ
  51. ஒருவர் அகுதம் பண்ணி
  52. னவர்கள் தாய்
  53. தகப்பன் குரு
  54. வையும் கெ
  55. ங்கை கரையி
  56. லே காராம் ப
  57. சுவைக் கொன்ற
  58. தோஷத்
  59. தேலே பாக
  60. கடவர்களாக
  61. வும் உ

குறிப்பு:

  • கல்வெட்டு எண்: 64.
  • ஆதாரம்: அக்டோபர் 2004: பக்கம் 5-7: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *