நல்லிணக்க நாயகர்கள் -4

1 Min Read

கொங்கேணசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்

  • காலம் 1: மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735–1737) காலத்தில், 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கேணசுவரர் – ஞானாம்பிகை, அன்னபூரணி ஆகியாருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்துப் பூசையை நடத்தியவர்களில் பாசக்கடை மீரா சாயபு” ஒருவர்.
  • காலம் 2: மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739–1763) காலத்தில், “பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை” ஆகியாருடன் சேர்ந்து துலுக்கர் லெப்பை” வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கேணசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு உதவினர். இதில் இஸ்லாமிய வணிகர்களும் இணைந்துள்ளனர்.

பாசப்பேட்டை இஸ்லாமிய வணிகர்களின் கொடை

விவரங்கள்

  • பாசப்பேட்டை அகமது ராவுத்தன், அரசாங்கண்டு ராவுத்தன், சன்னபள்ளை ராவுத்தன் ஆகியோர் பொது ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர்.
  • பரவுர ராஜகாரியார் சந்தப்பேட்டை சயது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன், ராஜகாரியார் மீரா லெப்பை, மூக்குப்புற கூள மீரா லெப்பை, சறுத்து லெப்பை, மாதாரூ லெப்பை, மாம ராவுத்தன், எலிப்பாடி ராவுத்தன், மீரயாளி ராவுத்தன், களுசாத்தன ராவுத்தன் சன்ன மீரா லெப்பை, பெரிய மீரா லெப்பை ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர்.

ஆதாரம்

  • தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு, இராசு, பக். 91, 95

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *