வராகசாமி கோயிலுக்குச் சாத்துல்லாகான் காலக் கொடை
வரலாற்றுத் தகவல்
- காலம்: டில்லி பேரரசர் பரூக்ஷா பாதுஷா ஆட்சியின்போது, அவரின் கீழ் கர்நாடக நவாபாக இருந்தவர் நவாப் சாத்துல்லாகான் சாகப் அவர்கள்.
- செய்தி: அவருடைய ஆணையின்படி ராஜா தோடர்மால் மூலம் ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி என்ற பெருமாள் கோயிலுக்குக் கீழ் புளியங்குடி, புத்தூர், நெடுஞ்சேரி, மலையான்புத்து முதலிய
ஊர்களை மானமாகக் கொடுத்து, அதை நிர்வாகிக்க உள்ளூர்ப் பாளையக்காரருக்கு அதற்குரிய சன்னதும் கொடுத்தார்.
- நாள்: இச்சிறப்பு மிகு கொடை 1.5.1714 அன்று அளிக்கப்பட்டு அதற்குரிய செப்பேடும் எழுதப்பட்டது.
ஆதாரம்
- Annual Report on Epigraphy 15(A) 1953, 87(A) 1953
