நல்லிணக்க நாயகர்கள்-2

1 Min Read

மங்களேஸ்வரியம்மனுக்குச் செய்யது இஸ்மாயில் செய்த வெண்கலத் திருவாசி

வரலாற்றுத் தகவல்

  • இடம்: இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை, மங்களேஸ்வரியம்மன் சன்னதி வாசலில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள்.
  • காலம்: 1924.
  • செய்தி: மதுரையில் மேனேஜராக இருந்த செய்யது இஸ்மாயில் சாயபு அவர்கள், 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேஸ்வரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியன் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு

  1. சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம்
  2. 27 தேதி சோம் வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும்
  3. வரியநாம் யோகமும்கவுளவ கரணமும் கூடிய சுபதினத்தில்
  4. திருவுத்தரகோசமங்கை ஸ்ரீமங்களேஸ்வரியம்மன் சன்னதிக்கு மதுரை
  5. யிலிருக்கும் மகாராஜராஜஸ்ரீ செய்யது இஸ்மாயில் சாயபு அவர்கள் மேனேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிர்தத்திலிருந்து செய்து வை
  6. த்த 230 விளக்குள்ள வெண்கல யாழி முகத் திருவாசி
  7. க்கு சேர்
  8. 842 3/4
  9. சலப்பம் வீரபுத்திர ஆசா
  10. ரி சுஹஸ்தம்

ஆவணம் 7

  • காலம்: சூலை 1996
  • ஆதாரம்: தமிழகத் தொல்லியல் கழகம், பக்கம் 122
  • .

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *