மங்களேஸ்வரியம்மனுக்குச் செய்யது இஸ்மாயில் செய்த வெண்கலத் திருவாசி
வரலாற்றுத் தகவல்
- இடம்: இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை, மங்களேஸ்வரியம்மன் சன்னதி வாசலில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள்.
- காலம்: 1924.
- செய்தி: மதுரையில் மேனேஜராக இருந்த செய்யது இஸ்மாயில் சாயபு அவர்கள், 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேஸ்வரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியன் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு
- சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம்
- 27 தேதி சோம் வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும்
- வரியநாம் யோகமும்கவுளவ கரணமும் கூடிய சுபதினத்தில்
- திருவுத்தரகோசமங்கை ஸ்ரீமங்களேஸ்வரியம்மன் சன்னதிக்கு மதுரை
- யிலிருக்கும் மகாராஜராஜஸ்ரீ செய்யது இஸ்மாயில் சாயபு அவர்கள் மேனேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிர்தத்திலிருந்து செய்து வை
- த்த 230 விளக்குள்ள வெண்கல யாழி முகத் திருவாசி
- க்கு சேர்
- 842 3/4
- சலப்பம் வீரபுத்திர ஆசா
- ரி சுஹஸ்தம்
ஆவணம் 7
- காலம்: சூலை 1996
- ஆதாரம்: தமிழகத் தொல்லியல் கழகம், பக்கம் 122
- .
