தஞ்சை பாதிரியும் ஹைதர் அலியும்
ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசையால் கம்பெனி வெள்ளையர்கள் மீது ஹைதர் அலி கொண்ட கோபம் யாவரும் அறிவர்.
ஆனால் கிறிஸ்தவப் பாதிரிமார்களிடம் அன்பும் இரக்கமும் கொண்டிருந்தார். மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அவர் மாளிகை அருகிலேயே அயல் நாட்டு பாதிரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
பிரஷ்யா நாட்டில் சோனேபர்க் என்ற ஊரில் 1726-இல் பிறந்தவர் கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக் ஸ்வார்ட்ஸ். 1749-இல் டேனிஷ் மிஷனரிக் குழுவில் இடம்பெற்று, கிழக்கிந்தியக் கம்பெனிக் கப்பலில் பயணம் செய்து 17.7.1750-இல் கடலூர் வந்தார். 10 ஆண்டுகள் தரங்கம்பாடியில் இருந்தார். 1754-இல் கடலூர், 1758 நாகை, 1760 இலங்கை, 1766-1776 திருச்சியில் பணியாற்றினார். பின் தஞ்சையில் வாழ்ந்து 13.2.1798-இல் மறைந்தார்.
கிழக்கிந்தியக் கம்பெனியில் செல்வாக்கு பெற்றிருந்த அவர், ஹைதர் அலிக்கும் கம்பெனிக்கும் சமரசம் செய்துவைக்க விரும்பி, ஹைதர் அலியை இருமுறை சந்தித்துள்ளார். ஹைதர் அலி, ஸ்வார்ட்ஸ் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். தன் நாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஸ்வார்ட்ஸ் பாதிரியாருக்கு எந்தத் தொல்லையும் கொடுக்கக்கூடாது என்றும், அவர் மிகப் புனிதமான மனிதர் என்றும், அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் ஹைதர் அலி ஆணை பிறப்பித்திருந்தார்.
கிழக்கிந்தியக் கம்பெனி இயக்குநர்கள் ஸ்வார்ட்ஸ் பாதிரியாருக்கு
மரியாதை செலுத்த ஒரு நினைவுக் கல்வெட்டுப் பொறித்தனர். அந்த ஆங்கிலக் கல்வெட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தூய மேரி தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட ஹைதர் அலியின் ஆணை பற்றிய குறிப்பு வருகிறது.
சென்னை புனித மேரி தேவாலயக் கல்வெட்டு
கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் சுவார்ட்சு பாதிரியாருக்குத் தங்கள் புகழஞ்சலியைத் தெரிவிக்கும் பொருட்டு 1807ஆம் ஆண்டு சென்னைக் கோட்டைக்குள் அமைந்துள்ள தூய மேரி தேவாலயத்தில் ஒரு நினைவுக் கல்வெட்டைப் பதித்தனர். அதில் கீழ்வருமாறு ஆங்கில உரைநடையில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ஸ்வார்ட்சு பாதிரியாரின் வாழ்வுப் பணிகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
இவர் வாழ்க்கை தனது ஆசீர்வதிக்கப்பட்ட போதகரின் மாதிரியைப் பின்பற்றுவதற்கான தொடர்ச்சியாக இருந்தது. டென்மார்க் அரசாங்கத்தால் ஒரு புராட்டஸ்டன்ட் மிஷனரியாகவும், இங்கிலாந்தின் “கிறிஸ்தவ அறிவைப் பரப்புவதற்கான சங்கத்தாலும்” (SPCK) நியமிக்கப்பட்டு, ஐம்பது ஆண்டு காலம் “நன்மை செய்கிறவராகவும் மக்களை நன்மையின் பால் அழைப்பவராகவும் பல பயணங்களை மேற்கொண்டு, சுயநலம் மிகுந்த உலகியல் லௌகீக நோக்கங்களிலிருந்து முற்றிலும் விலகி, சக மனிதர்களின் இம்மை மற்றும் மறுமையின் நித்தியமான நன்மைகளை உயர்த்துவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டவர்,
இவர் கண்ணோட்டத்தில் இவர் பின்பற்றிய பரப்பிய கிறித்தவ சமயம் என்பது இருள் சூழ்ந்த தோற்றத்துடனோ, சோர்வுடனோ இல்லாமல் கடுகடுப்பான கடுமையான அணுகுமுறை கொண்டதாக இல்லாமல் அமைதியான அழகார்ந்த வடிவத்தோடும் கண்ணியத்தோடும் திகழ்ந்தது. தஞ்சையில் நிறுவப்பட்ட தேவாலயம் அவருடைய அயராத உழைப்பின் வெளிப்பாடாகும். அவருடைய சொற்ப ஊதியத்திலிருந்து சேமிக்கப்பட்ட தொகையும் கூட, பல ஆண்டுகளாக தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. மீதமுள்ள செலவுகள் அவருடைய வேண்டுகோளின் பேரில் பிற நபர்களால் வழங்கப்பட்டன. மேலும் இராமநாதபுரம், திருநெல்வேலி மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவப் பள்ளிகளும் (பயிற்சி மையங்களும்) இவராலேயே நிறுவப்பட்டன.
ஐரோப்பியர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு கண்ணியப்படுத்தப்பட்ட இவர் இந்நாட்டின் அனைத்துத் சமயங்களை சேர்ந்த மக்களால் போற்றுதலுக்குரிய மனிதராகவும் கண்ணியம் மிகுந்தவராகவும் கருதப்பட்டார். இவருடைய நேர்மை மற்றும் வாய்மையின் மீது அவர்கள் வைத்திருந்த எல்லையற்ற நம்பிக்கை, பல சந்தர்ப்பங்களில் பொதுச்சேவைக்கு மிகுந்த நன்மையளிப்பதாக அமைந்தது. எளியோரும் பாதிக்கப்பட்டோரும் அவரைத் தங்களின் உற்ற நண்பராகவும் ஆதரவாளராகவும் நோக்கினர். உலகின் வல்லமையும் அதிகாரமும் கொண்ட மனிதர்கள் இப்பகுதியில் ஏக மனதாக ஒரு ஐரோப்பியரின் நற்பண்பிற்கு மிகவுயர்ந்த மரியாதையை செலுத்துவதற்காக இந்த இடத்தில இணைந்து நின்றனர்.
மறைந்த ஹைதர் அலி கான், கர்நாடகப் பகுதியில் ஆங்கிலேயருடன் தீவிரமான போரில் ஈடுபட்டிருந்த நேரத்திலும், தன் அதிகாரிகளுக்கு, “கண்ணியத்திற்கு உரிய பாதிரியார் சுவார்ட்ஸை எவ்விதத் தொந்தரவுமின்றி இயங்க அனுமதியுங்கள். அவருக்கு மரியாதையும் தயவும் காட்டுங்கள். ஏனெனில் அவர் ஒரு பரிசுத்தமான மனிதர், நம் அரசாங்கத்திற்குத் தீங்கு செய்ய எண்ணாதவர்” என்று கட்டளையிட்டார்.
மறைந்த தஞ்சாவூர் துளஜாஜி ராஜா, தம் மரணப் படுக்கையில் இருந்தபோது, தம்முடைய வளர்ப்பு மகனும் தற்போதைய ராஜாவுமான சரபோஜியையும், தம் நாட்டின் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் பாதிரியார் சுவாட்ஸ் அவர்களின் பராமரிப்பிலும் மேற்பார்வையிலும் வழங்கி தன் நாட்டின் விவகாரங்களை கண்காணித்து ஆலோசனை வழங்கும் ஆலோசகராக்க விரும்பினார். மேலும் மன்னர் துலாஜ்ஜியால் தஞ்சாவூருக்கு கிழக்கே இரண்டு மைல் தொலைவில் சுவாட்சுக்கு பரிசாக வழங்கப்பட்ட நிலப்பரப்பில், தனது குடியிருப்புக்காக ஒரு வீட்டைக் கட்டி, அதை ஓர் ஆதரவற்றோர் இல்லமாக மாற்றினார். இங்கே அவருடைய வாழ்வின் இறுதி இருபது ஆண்டுகள், குறிப்பாக ஏழ்மையான மக்களும் அவர்களின் பிள்ளைகளுக்கு, இலவசமாக உணவளித்து கற்பிப்பதன் மூலம் அப்பிள்ளைகள் கல்வி முன்னேற்றமும் ஆன்மீகப் வளர்ச்சியும் பெற்று வளர்ந்தனர்.
மேலும் இங்கே, 1798 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி, தம்முடைய சிறு குழுவுகுக்கு வழங்கிய அறிவுரைகளில் தன் ஊழியர்களுக்கு ஆன்மீகக் காரியங்களையே தங்களின் முதல் கடமையாகத் தொடர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதோடு அவர்களிடம் கேட்டுக்கொண்டு, அவர்களின் ஊழியத்திற்கு இறை ஆசீர்வாதத்தைத் இறுதி மூச்சு வரை பிரார்த்தித்து மன்றாடினார். தனது 72 ஆவது வயதில் தனது உண்மையான உண்மையான கிறிஸ்தவப் பயணத்தை நிறைவு செய்தார். அவரின் ஒப்பற்ற நற்பண்பின் நினைவை என்றென்றும் நிலைநிறுத்த ஆவலுடனும், அவருடைய செல்வாக்கினால் விளைந்த பொது நன்மைகளை நன்றியோடு உணர்ந்தும், கிழக்கு இந்தியக் கம்பெனி இந்த நினைவுச் சின்னத்தை நிறுவியது.
SACRED TO THE MEMORY OF THE REV. CHRISTIAN FREDERICK SWARTZ,
WHOSE LIFE WAS A CONTINUED EFFORT TO IMITATE THE EXAMPLE OF HIS BLESSED MASTER.
EMPLOYED AS A PROTESTANT MISSIONARY FROM THE GOVERNMENT OF DENMARK, AND IN THE SAME CHARACTER BY THE SOCIETY IN ENGLAND FOR THE PROMOTION OF CHRISTIAN KNOWLEDGE, HE, DURING A PERIOD OF FIFTY YEARS, “WENT ABOUT DOING GOOD;” MANIFESTING IN RESPECT TO HIMSELF, THE MOST ENTIRE ABSTRACTION FROM TEMPORAL VIEWS, BUT EMBRACING EVERY OPPORTUNITY OF PROMOTING BOTH THE TEMPORAL AND ETERNAL WELFARE OF OTHERS.
IN HIM RELIGION APPEARED NOT WITH A GLOOMY ASPECT, OR FORBIDDING MIEN, BUT WITH A GRACEFUL FORM AND PLACID DIGNITY.
AMONG THE MANY FRUITS OF HIS INDEFATIGABLE LABOURS WAS THE ERECTION OF THE CHURCH AT TANJORE. THE SAVINGS FROM A SMALL SALARY WERE, FOR MANY YEARS, DEVOTED TO THE PIOUS WORK, AND THE REMAINDER OF THE EXPENSE SUPPLIED BY INDIVIDUALS AT HIS SOLICITATION.
THE CHRISTIAN SEMINARIES AT RAMNADPORAM AND IN THE TINNEVELLY PROVINCE WERE ESTABLISHED BY HIM.
BELOVED AND HONOURED BY EUROPEANS, HE WAS, IF POSSIBLE, HELD IN STILL DEEPER REVERENCE BY THE NATIVES OF THIS COUNTRY, OF EVERY DEGREE AND EVERY SECT; AND THEIR UNBOUNDED CONFIDENCE IN HIS INTEGRITY AND TRUTH WAS, ON MANY OCCASIONS, RENDERED HIGHLY BENEFICIAL IN THE PUBLIC SERVICE.
THE POOR AND INJURED LOOKED UP TO HIM AS AN UNFAILING FRIEND AND ADVOCATE; THE GREAT AND POWERFUL CONCURRED IN YIELDING HIM THE HIGHEST HOMAGE EVER PAID IN THIS QUARTER OF THE GLOBE TO EUROPEAN VIRTUE.
THE LATE HYDER ALLY CAWN, IN THE MIDST OF A BLOODY AND VINDICTIVE WAR WITH THE CARNATIC, SENT ORDERS TO HIS OFFICERS “TO PERMIT THE VENERABLE FATHER SWARTZ TO PASS UNMOLESTED, AND SHOW HIM RESPECT AND KINDNESS, FOR HE IS A HOLY MAN, AND MEANS NO HARM TO MY GOVERNMENT.”
SURROUNDED BY HIS INFANT FLOCK, AND IN THE PRESENCE OF SEVERAL OF HIS DISCONSOLATE BRETHREN, ENTREATING THEM TO CONTINUE TO MAKE RELIGION THE FIRST OBJECT OF THEIR CARE, AND IMPLORING WITH HIS LAST BREATH THE DIVINE BLESSING ON THEIR LABOURS, HE CLOSED HIS TRULY CHRISTIAN CAREER IN THE 72ND YEAR OF HIS AGE.
THE EAST INDIA COMPANY, ANXIOUS TO PERPETUATE THE MEMORY OF SUCH TRANSCENDENT WORTH, AND GRATEFULLY SENSIBLE OF THE PUBLIC BENEFITS WHICH RESULTED FROM HIS INFLUENCE, CAUSED THIS MONUMENT TO BE ERECTED.
செ. இராசு; தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, பக்கம் 85, 86, 87.
