இஸ்லாமிய சமுதாயம் பெற்ற பரிசு காயிதே மில்லத் அறிஞர் அண்ணா

4 Min Read

“தமிழகத்தின் அரசியல் வானில் கப்பியிருக் கிற காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராக, காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காஞ்சிக்கு வந் துள்ள இந்த நாள் அரசியலில் ஒரு புனிதநாள்” என்று தி.மு.க. பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் 30-1-62 அன்று காஞ்சி புரம் ஒலிமுஹம்மது பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசியதாவது. –

“நான் நெடுநாட்களாக விரும்பிய கூட்டுறவு, இப்போது முஸ்லிம் லீுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.

“இன்று முஸ்லிம் லீக்கிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஏற்பட்டுள்ள உடன்பாடு, பெரும்பாலான மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது; அதே சமயத்தில் சில சுயநல வாதிகளுக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

“அரசியலிலே நேர்மையும் நாணயமும் நிலவ வேண்டுமென்ற அடிப்படையில் பாடுபடும் போற்றுதற்குரிய ஒரு தலைவராக முஹம்மது இஸ்மாயில் அவர்கள் விளங்குகிறார்கள்.

“உங்களிலே பலருக்கும் தெரியாமலிருக்க லாம்- அரசியல் நிர்ணய சபையிலே ஆட்சி மொழி பற்றிய விவாதம் நடந்தபோது, ஆட்சி மொழியாகத் தமிழை ஆக்கவேண்டும் என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய ஒரே தலைவர், காயிதே மில்லத் அவர்கள் தாம். இதை நான் சட்டசபையில் குறிப்பிட்ட போது, நிதியமைச்சர் சுப்பிரமணியம் ‘அப்படியா?’ என்று ஆச்சரியப் பட்டார். அதற்கான ஆதாரத்தைக் காட்டிய போது, இருக்கலாம் அப்போதெல்லாம் நான் (பேக்குபெஞ்சர்) கடைசி பெஞ்சு ஆசாமியாக இருந்தேன்’ எனக் கூறினார். அப்படிப்பட்ட அரும்பெரும் அரசியல் தலைவராக காயிதே மில்லத் அவர்கள் விளங்குகிறார்கள். என்னைப் பொறுத்த வரையிலே இந்தத் தேர்தல் உடன்பாட்டை, இன்பக் கனவுகளை நன வாக்கும் ஒரு அச்சாரம்ாகவே நான் கருது கிறேன். ஏனென்றால் தேர்தல் நம் பயணத்தின் முடிவல்ல; என் பயணம் நீண்டது. அதில் தேர்தல் ஒரு மைல் கல். இந்த உடன்பாட்டின் மூலம் அரசியல் காரிருளை நீக்கும் ஒளிக்கதிர்கள் சுடரிட ஆரம்பித்துவிட்டன.

“இஸ்லாமியருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு இதயபூர்வமானது. காயிதே மில்லத் அவர்களே! நான் பெருமையோடு சொல்லிக் கொள்வேன். இந்த ஒலிமுஹம்மது பேட்டை யிலே ஒவ்வொரு முஸ்லிம் வீட்டுக்கும் நான் விட்டுப்பிள்ளை. நாங்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கிற நேசம் அளவிடற்கரியது.’ என்றுமே இந்தக் காஞ்சிபுரத்திலே இந்த நட்பைப் பேணி வருகிறோம்.

“இருமாதங்களுக்கு முன்னர் குரோம் பேட்டையிலே காயிதே மில்லத் அவர்களைச் சந்தித்த போது, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது பற்றியும், அரசியலில், லாபத் தைக் காட்டியும், அச்சத்தைக் காட்டியும் செய்யப்படும் அநீதியைப் பற்றியும் அவர்கள் சொன்னார்கள். அப்போது அவர்கள் கண்களில் நீர் கசிந்ததை நான் கண்டேன். அந்த அளவுக்கு அரசியலை செம்மைப்படுத்த வேண்டுமென்ற ஆர்வமுடையவர்கள் அவர்கள். இதூத்க்காரணம் அவர்கள் சார்ந்துள்ள இஸ்லாம் ஜனநாயகத் தைப் போதித்த அளவுக்கு எந்த நெறியும் போதிக்கவில்லை. “ஒன்றே தெய்வம் ஒன்றே குலம் என்ற இஸ்லாமிய நெறி, பண்டைய தமிழருடைய நெறிக்கு மிகவும் இயைந்ததாகும். இடைக்காலத்திலே நாம் எங்கெங்கோ அலைந்தோம்! எதை எதையோ தேடினோம். மறுபடியும் அந்த அறநெறியை தேடிக்கடைப்பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம்.

“இதை அடக்கி ஒடுக்க, சர்வாதிகாரத்தை அவிழ்த்துவிட ஆகும் படத்தில் உள்ள சிலர் முயற்சிக்கிறார்கள். மக்கள் ஆமைகள் என, ஒடுங்கி வின்மக்கீப் போல் வாய் பொத்தியிருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். அவர்கள் காட்டிய வழியில் நடக்க வேண்டும். நீட்டிய இடத்திலே கையெழுத்திட வேண்டும் என விரும்புகிறார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசுகிறார்கள். இந்த நிலை ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. இதற்கு நாம் ஒரு முடிவு கண்டாக வேண்டும்.

“இந்த நாட்டு முஸ்லிம்களுக்குப் போதிய பிரதிநிதித்துவத்தை, காங்கிரஸார் அளிக்கவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு அமைச்சரும், முக்குலத்தாருக்கு ஒரு அமைச்சரும் நாடாளுமக்கு ஒரு அமைச்சரும் என்றிருக்கும் இந்த அமைச்சரவையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு அமைச்சர் இல்லை. இதுபற்றி ஒருமுறை நான் சட்டசபையில் பேசிய பொது, நிதியமைச்சர வைத்துக் கொண்டிருக்கும் பல பொறுப்புகளில் ஒன்றை முஸ்லிம் அமைச்சருக்கு அளிக்கலாம் என்று சொன்னேன். லீகைச் சார்ந்த-எங்களைச் சார்ந்த-முஸ்லிம்களுக்கு வேண்டாம். உங்களைச் சார்ந்த யாராவது ஒருவருக்கு அந்தப் பதவியை அளிக்கக் கூடாதா? என்று நான் கேட்டேன். அப்போது அங்கே அமர்ந்திருந்த ஒரு காங்கிரஸ் முஸ்லிம் அங்கத்தினர் புதுப் பெண்ணைப் போல் வெட்கப்பட்டு நாணிக் கோணி “வேண்டாம், வேண்டாம்” என்று சொல்வது போல் வளைந்தார். மந்திரி பதவி கேட்கப் போய் எம்.எல்.ஏ. பதவி கூடப் பறிபோய் விடுமோ என்ற அச்சமாய் இருக்கலாம் அவருக்கு.

“இப்படி அரசியலிலே ஒதுக்கப்பட்டவராக ஆக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தவளுக்குக் காயிதே மில்லத் அவர்களின் சேவை அளப்பரியதாகும்.

முஸ்லிம் லீக் ஒரு வகுப்புவாத ஸ்தாபனம் என்று குற்றம் சாட்டப்பட்டபோது, முஸ்லிம் லீக் என்றால், முஸ்லிம் பெருமக்களின் நலன்களையும், உரிமைகளையும், பாதுகாக்கும் ஒரு தேசிய அரசியல் சபை என்று நிலை நாட்டியவர் காயிதே மில்லத் அவர்கள்;

“கேரளாவிலே முஸ்லிம் லீகைக் கட்டித் தழுவியவர்கள், அதனுடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டு, அதை விட்டுத் தொலைந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து இப்போது, முஸ்லிம் லீக் என்ற பெயரைக்கேட்டாலே திமிளித்த சிறுபிள்ளையைப் போலத் துடிக்கிறார்கள்.

காயிதே மில்லத் அவர்கள் கையில் காசில்லாதவர்கள் தாம்; ஆனால் உள்ளத்தில் மாளில்லா தவர்கள். கோடீஸ்வரர்களும், பெரும் வணிகர்களும் அஞ்சி காங்கிரஸுக்கு ஓடி விட்ட போது இந்த சமுதாயத்திற்காக குரல் கொடுத்து பாடுபட்டவர்கள் காயிதே மில்லத் அவர்கள்.”துறவிக்கு வேந்தன் துரும்பு” என்பார்கள், அப்படித்தான் காயிதே மில்லத் அவர்கள் சொந்த நலத்தை கொஞ்சமும் கருதாத அரசியல் வாதியாக, அச்சம், தியை, தாட்சண்யமின்றி, உண்மையை எடுத்துரைக்கக் கூடிய நெஞ்சம் பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.

“ஆண்டவனின் வழியைக் காட்டிய நபிகள் நாயகத்திற்கு ஏற்பட்ட ஆபத்துக்களை அவர்களுடைய நெஞ்சுக்கு நேரே நீட்டப்பட்ட ஈட்டிகளை, அவர்கள் பாதையில் ஏற்பட்ட தடைகளையெல்லாம் எண்ணி, எதையும் தாங்கும் இதயம் பெற்றுவர்களாக வாழுகிறார்கள். எனவேதான் அந்த நல்லவர்கள், நாடாண்டவர்கள், நன்னெறி தந்தவர்கள், தலைவரான காயிதே மில்லத் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்தது அரசியலில் ஒரு புனித நாள் என்றேன்.”   [ 5-6-62 உரிமைக்குரல் ]

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *