ஹைதர் மற்றும் திப்புவின் வரலாற்றில் கிறிஸ்தவ மக்களுடனான அணுகுமுறையும் உறவும் பெரும் விவாதத்தை இன்றும் தாங்கி நிற்கிறது, வரலாற்று ஆய்வாளர்களில் ஒரு சாரார் இருவரும் கிறிஸ்தவர்களுடன் நன்முறையில் நடந்து கொள்ளவில்லை வன்முறையை கையாண்டனர் என்றும் மறுசாரார் இல்லை இந்துக்களை போல் கிறிஸ்தவர்களிடமும் ஹைதரும் திப்புவும் தாராள மனப்பான்மையுடனேயே நடந்து கொண்டனர் என வாதிடுகின்றனர், நேர்மையாக வரலாற்றை வாசிக்கும் யாரும் பக்க சார்பற்று அதை ஆய்வு செய்ய வேண்டிய தேவையிருகிறது, வகுப்பு வாதத்தை நோக்கமாக கொண்டோர் இவ்விவகாரத்தை திட்டமிட்டு அவ்வபோது ஊதி பெரிதாக்குகின்றனர்…இந்தியா போன்ற பன்மை சமூகத்தில் இதுபோன்று ஊதி பெரிதாக்கப்படும் விசயங்கள் எப்படி பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து ஆயிந்து அறிந்து பொறுப்பு உணர்வுடனேயே இந்த கட்டூரை தீட்டப்டுகிறது…
நவீன இந்திய வரலாற்றின் தொடக்கமாகவும் திருப்பு முனையாகவும் திப்புயிருப்பதால். அந்த பொறுப்பு உணர்வுடனேயே வரலாற்று ஆய்வாளர்கள் திப்புவை குறித்து எழுதும் பொழுது அன்றைய இந்திய ஆட்சியாளர்கள் திப்புவிற்கு பின்திரண்டு யிருந்தால் இந்திய வரலாறே மாறியிருக்கும் என்கிறார்கள்…
மராத்திகளையும் நாயர்களையும் இந்துக்கள் என்ற அளவீட்டின் வழி திப்புவை அணுகுவோர் வேலு நாச்சியாரும் பூலி தேவரும் தீரன் சின்னமளையும் மருது சகோதரர்களும் ஸ்ரீரங்க சங்கராச்சாரியும் இந்துக்கள்தான் என்ற அளவீட்டின் வழி திப்புவை அணுகவேண்டிய தார்மீக தேவையுள்ளது ,
ஆங்கிலேயர்களையும் கனரா பகுதி மக்களையும் கிறிஸ்தவர்கள் என்ற கண்நோட்டத்தின் வழி நாம் திப்புவை அணுகினால் பிரெஞ்சு காரர்களும் ,அமெரிக்கர்களும் அர்மேனியா கிறித்தவ சமூகத்தாரும் கிறித்தவர்கள் தான் என்ற புறிதளுடன் திப்புவை அணுக வேண்டிய தேவையுள்ளது,
திப்புவை ஒரு இஸ்லாமியர் என்ற கண்நோட்டத்தில் அணுகினால் ஹைதரா பாத் நிஜாம்கள் மஹ்தவிக்கள் ,முஸ்லிம்கள்தான் என்ற கண்னோட்டத்தில் அணுக வேண்டிய தேவையுள்ளது,
உண்மையில் இந்த ஒப்பீடுகள் திப்புவை மதிப்பிடுவதர்கான மதிப்பீடுகள் அல்ல….அடிப்படையில் திப்பு மத பற்று கொண்டவராக யிருந்திருகிறார் மதவெறி கொண்டவராகயில்லை,
சர்வ வல்லமை கொண்ட ஒற்றை அதிகார மய்யமான ஒரு முடியரசின் தலைவனாயிருந்த போதும் பன்முக பார்வைகொண்ட ஒரு எதார்த்தவாதியாக மக்களை நேசித்து வாழ்ந்து திப்பு – இந்திய சமூகத்திற்கு வழிகாட்டி கொண்டிருக்கிறார்…. இந்த பின்புலத்தில் திப்புவிற்கும் கிறித்தவ சமூகத்திற்குமான உறவை அக்கால எதார்த்தத்தின் வழினின்று நேர்மையாக அனுகவேண்டியுள்ளது,
அதே வேளையில் வரலாற்று ஆய்வாளர்கள் திப்பு குறித்து எழுதும் பொழுது அவர்கள் பயன் படுத்தும் சொல்லாடல்கள் கவனிக்க வேண்டியது , உதாரணமாக
1 Tipu Sultan’s Search for Legitimacy: Islam and Kingship in a Hindu Domain ,
2 MUSLIM RULERS OF MYSORE AND THEIR CHRISTIAN SUBJECTS
போன்ற தலைப்புகளே அந்த வரலாற்று ஆய்வாளர்கள் எந்த கண்னோட்டத்தில் அந்த வரலாற்றை நோக்குகிறார்கள் என்பதை காட்டுகிறது, இந்த பார்வையே திப்புவின் ஆட்சிக்கும் அக்கால யதார்த்தத்திற்கும் முரனானது, அவர்களின் கண்னோட்டத்தில் நாம் திப்புவின் காலத்தை அணுகினால் இந்து முஸ்லிம் கிறித்தவர் அடையாளத்தின் வழியே கடிதபோக்வரத்துகளில் பெயர்கள் குறிப்பிடபட்டுள்ளன இவைகள் அக்கால நடைமுறையில் உள்ள மிக சாதாரண விஷயம் என்பது புலப்படும், இப்படியான ஒரு காலகட்டத்தில் திப்பு எப்படி ஆட்சி புரிந்தார் எதனை முதன்மை படுத்தினார், அக்கால எதார்த்தம் என்ன என்ற புரிதல் மட்டுமே திப்புவை சரியாக புரிய உதவும்…. இந்த அடிப்படையில் கிறித்தவ சமூகத்திற்கும் திபுவிற்குமான உறவுகள் மதிப்பீடு செய்யப்படவேண்டும்…
ஹைதர் அலி கிறிஸ்தவர்களுடன் மிகவும் நல்லுறவைக் கொண்டிருந்தார். ஹைதருக்கு கோவாவை சேர்ந்த இரண்டு பாதிரியார்கள் தனிப்பட்ட நண்பர்களாக இருந்தனர்—ஒருவர் பெயர் பிஷப் நோரோன்ஹா, மற்றொருவர் ஃபாதர் ஜோவாகிம் மிராண்டா. மேலும் புரொட்டஸ்டன்ட் மிஷனரியான ரெவ். ஸ்வார்ட்ஸ், ஹைதரின் அரசவையில் சில காலம் அங்கம் வகித்தார். ஹைதரின் படையில் பல கத்தோலிக்க வீரர்களும் இருந்தனர். ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டைக்குள்ளேயே அவர்கள் வழிபட ஒரு தேவாலயம் இருந்தது; அங்கு பல பிரெஞ்சு தளபதிகளும் பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு பாதிரியார்கள் வருகை தரும் போதெல்லாம் அங்கே தங்குவதர்க்கு ஹைதர் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
ஹைதரின் நிர்வாகதிலும் கனரா பகுதியை சேர்ந்த கிறித்தவர்களும் அங்கம்பெற்றனர் என்று ஏ.எல்.பி. டிசௌசா பதிவு செய்கிறார் . ஹைதர் மற்றும் திப்புவின் தனிப்பட்ட குணாதிசயங்களின் வழியும் அக்கால எதார்த்தத்தின் பின்புலத்தில் கிறுத்தவ சமூகத்தின் சமூக நிலையை அணுகினால்,
போர்ச்சுகீசிய வர்த்தகர்களாளும் அவர்களின் மிஷனரிகளின் சமய போதனைகளால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவத்திற்கு மாறி கோவாவிலிருந்து குடியேறி நன்கு வேரூன்றிய கிறித்தவ சமூக மக்களை பெரும்பான்மை யாக கொண்டு உருவாகியிருந்தது அன்றைய கனரா பகுதி,
ஏறத்தாழ 27 பெரும் குடியிருப்புகளையும் கொண்டு அடர்த்தியான கிறித்தவ மக்கள் தொகையையும் சிறந்த வியாபார தொடர்புகளால் செழிப்பான வாழ்வும் வலிமையான சமூக அதிகாரமும் கொண்ட மக்களாக வாழ்ந்து வந்தனர், அந்த 27 குடியிருப்புகளுக்கும் தனி தனியே ஒவ்வொரு குடியிருப்பிற்கும் ஒரு vicar மதகுருவும் அவர் தலைமையிளான ஒரு தேவாலயமும் இருந்தது இந்த vicar களை நிர்வகிக்கும் விதமாக கோவாவை தலைமையிடமாக கொண்ட ஓர் தலைமை பேராயரின் கட்டுப்பாட்டில் ஒரு Vicar General நியமிக்கப்பட்டு மையப்படுத்தப்பட்ட ஒரு நிர்வாக ஒழுங்கின் கீழ் ஏனைய vicar கள் நிர்வகிக்கப்பட்டனர் இதுவே ஹைதர் அலி கனராவை கைப்பற்றிய தருணத்தில் கனராவின் சமூக நிலை,
இந்த சமூக நிலையின் அதிகாரம் எப்படி நிலை நிறுதப்பட்டு நிர்வகிக்க பட்டு கொண்டிருந்தது என்பதை புறிந்து கொள்ள ஹைதர் கனராவை கைப்பற்றுவதற்கு முன்பு இக்கேரி நாயக்கர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்களுக்கு இடையேயிருந்த ஓர் ஒப்பந்தத்தின் வழி அறியலாம்….
அந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களிடையோ அல்லது கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே எழும் பிணக்குகளைப் போர்ச்சுகீசியர்களே தீர்த்து வைக்க முடியும் அதே வேளையில் அப்பகுதியின் துறைமுகம் வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை அல்லது வேறு ஏதேனுமான , பிணக்குகளை தீர்த்து வைக்கவோ அல்லது தண்டனை வழங்கும் அதிகாரமோ போர்திகீசியர்களுக்கு மட்டுமே உண்டு, ஒருவேளை போருதுகீசிய அதிகாரிகளை அணுகமுடியாத நேரத்தில் அந்த விவகாரங்கலை தீர்த்து வைக்கும் அதிகாரம் அந்த பகுதியின் vicer கே உண்டு, ஒருவேளை அந்த தீர்ப்புகளில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றால் கோவா அரசாங்கத்திடம் மட்டுமே மேல் முறைஈட்டிக்கு செல்ல வேண்டும், மேலும் அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகளில் உள்ளூர் ஆளுநர்களும் தானாதாரர்களும் (Thanadars) எந்நிலையிலும் தலையிடக்கூடாது…
மேலும், ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்வதாக அறியப்படும் எந்தவொரு கிறிஸ்தவரும் கோவாவிற்கு நாடுகடத்தப்படுவதற்காகப் போர்துகீசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், அங்கு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் இக்கேரி ராஜாவோ அல்லது அவரது குடிமக்களோ கிறிஸ்தவர்களை வியாபாரம் செய்ய அனுமதிமறுத்தோ அல்லது கடன்களுக்காக கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். கனரா ராஜாவின் பிராந்தியத்தில் கோவாவிலிருந்தோ அல்லது பிற போர்ச்சுகீசியப் பகுதிகளிலிருந்தோ வந்த எந்தவொரு கிறிஸ்தவரும் இந்து பெண்களுடன் வாழ்வதற்கு அனுமதிக்கக் கூடாது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இத்தகைய தவறு நிகழும்போது, குற்றவாளியைப்பிடித்துக் கோவாவிற்கு நாடுகடத்த வேண்டும்; இதற்காக உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து எந்தத் தொந்தரவுக்கும் அவர்கள் ஆளாகக் கூடாது.
மங்களூர்ரில் உள்ள தொழிற்சாலைபகுதிகளிலும் , கிறிஸ்தவர்கள் வாழும் நகரங்கள் என எங்கெல்லாம் கிறித்தவ மக்கள் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் தேவாலயங்களைக் கட்ட போர்ச்சுகீசியர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். மேலும் கிறிஸ்தவமக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் மேலும் கிறித்தவ மக்களிடையே எழும் பிரச்சனைகளை அவர்களின் சொந்த சட்டத்தின்படி தண்டிக்க குருமார்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது,
மேலும் எந்த கிறித்தவ சமூகத்தாரும் கனரா வழியாகச் செல்ல நேர்ந்தாலோ, அல்லது வேறு நாட்டில் தங்குவதற்குக் குடியேறினாலோ, அவர்கள் உள்ளூர் தானாதாரர்கள் (Thanadars) மற்றும் ஆளுநர்களின் எந்தவொரு தொந்தரவிற்கும் ஆளாகாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும். மேலும் விற்பனைப் பொருட்கள் தவிர, அவர்கள் கொண்டு செல்லும் எந்தவொரு சாமானுக்கும் வரி செலுத்த வேண்டியதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு கிறிஸ்தவ சமூகம் ஒரு மதிப்புமிக்க தன்னாட்சி பெற்ற நிலையில் வாழ்ந்து வந்தனர், இது தோராயமாக ‘ஒரு நாட்டிற்குள் மற்றொரு நாடு’ (state within a state) போன்ற அமைப்பாக இருந்தது என உணரலாம்,
ஹைதர் அலி இக்கேரி நாயக்கரிடமிருந்து இந்தப் மாகாணத்தைக் கைப்பற்றியபோது, கிறித்தவ சமூகத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து மத வழி சலுகைகளையும் கிறித்தவ மக்களுக்கு உறுதிப்படுத்தினார்.
மேலும் 1776 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு பர்வானாவின் (உத்தரவு ஆவணம்) மூலம், கோழிக்கோடு கத்தோலிக்க திருச்சபைக்கு ஆண்டுதோறும் 2,440 பணங்கள் (fanams – நாணயப் பெயர்) மானியமாக வழங்கினார்; பரப்பனங்காடி தேவாலயத்திற்கு உதவியும் அதற்க்கு என சில சொத்துக்களையும் தானமாக வழங்கினார், மேலும் முன்பு போடப்பட்ட ஒப்பத்ததின் படி கிறித்தவ சமயத்தை பின்பற்றுபவர்கள் குற்றம் புறிந்துயிருந்தால் அவர்களை தண்டிக்கும் மதகுருமார்களின் அதிகார வரம்பையும் அங்கீகரித்தார் ,
1768 ஆம் ஆண்டு ,. ஹைதர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரை அறிவித்து கர்நாடகப் பகுதியில் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருந்த நேரத்தில் யுத்த இழப்புகளையும், மெட்ராஸில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையைத் தணிக்க , மேற்குக் கடற்கரையில் ஒரு திசைதிருப்பும் தாக்குதலை நடத்த ஆங்கிலேயப் பொதுப்படை (General Staff) முடிவு செய்தது. அதற்கேற்ப, மங்களூரைக் கைப்பற்றுவதற்காக அட்மிரல் வாட்சன் தலைமையில் பம்பாய் அரசாங்கம் ஒரு படையை அனுப்பியது.
கண்ணனூர் அரசாங்கத்தில் பணியாற்றிய ராமிஸ் ஹவில்தார் மற்றும் ஓனூரில் ஹைதரின் கடற்படைக்குத் தளபதியாக இருந்த ஒரு ‘மூர்ஸ்மேன்’ (Muslim) ஒரு முஸ்லிம் அதிகாரி ஆகியோரைத் தொடர்புகொண்டு, ஹய்தருக்கு துரோகம் செய்யுமாறு அணுகி வலியுறுத்த திட்டமிடப்பட்டது. மங்களூரில் முகாமிட்ட ஆங்கிலேயக் கடற்படை அந்த பகுதியில் நிலைபெற்றிருந்த போர்ச்சுகீசிய அதிகாரிகளுக்கு ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாகியது, ஒருபுறம் ஆங்கிலேயருக்கும் போர்திகீசியர்களுக்கும் வர்த்தக ரீதியான போட்டி இருந்தாலும், இரண்டு நாடுகளும் நீண்டகாலக் கூட்டணியால் பிராந்திய கூட்டணியில் பிணைக்கப்பட்டிருந்தன; மறுபுறம், கனராவில் அவர்கள் அனுபவித்த உரிமைகளின் காரணமாக அதனை தக்கவைத்து கொள்ள, எந்தவொரு படையெடுப்பாளர்களுக்கும் எதிராக உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கப் போர்ச்சுகீசியர்கள் தார்மீக ரீதியாகக் கடமைப்பட்டிருந்தனர் உள்ளூரை ஆட்சி செய்து கொண்டிருந்ததோ ஹைதர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், போர்ச்சுகீசிய அதிகாரி தனது நோக்கத்தை தெளிவாக அறிவித்தார்… எந்தவொரு தாக்குதலும் போர்த்துக்கீசியர்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட தேவாலயங்கள், போர்த்துக்கீசிய நலன்கள் மற்றும் அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவ சமூகம் ஆகியவற்றின் நலன்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று அறிவித்தார் .
அந்த நகரிலே நிலை பெற்றிருந்த போர்த்துக்கீசிய தொழிற்சாலையும் அதன் கோட்டையும் அன் நகரின் ஆற்றின் நுழைவாயலைக் கட்டுப்படுத்தியதால், போர்த்துகீசிய அதிகாரிகள் ஆங்கிலேய படையெடுப்பாளர்களுக்கு எதிராகச் செயல்படவில்லை என்றால் ஹைதரின் முயற்சிகள் வீண் போகிவிடும் என்பதால், ஹைதரின் அதிகாரிகள் இந்த இக்கட்டான வேளையில் போர்த்துக்கீசிய அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று இயற்கையாகவே எதிர்பார்த்தனர். இருப்பினும், அவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்குப் பிறகும் போர்த்துக்கீசிய அதிகாரியோ தனது நியாயம் அற்ற போக்கினால், தாங்களும் ஆங்கிலேயரும் இணைந்து கோட்டயை யும் நகரையும் முழுமையாக கைப்பற்ற ஒரு சதித் திட்டம் தீட்டினர். பீரங்கிப் படையின் தலைவரால் இந்தச் சதி முன்கூட்டியே ஹைதர் அறிந்து கொள்ள முடிந்தது, அந்த பீரங்கி படை தலைவர் ஒரு கிறிஸ்தவரும் கூட…
போர்துகீசிய அதிகாரி அரசாங்க சேவையில் உள்ளவர்கள் உட்பட அனைத்துக் கிறிஸ்தவர்களையும் தொழிற்சாலையில் தஞ்சம் புகுமாறு அழைப்பு விடுத்தார். அடுத்த நாள் ஹைதரின் படைகள் கோட்டையைத் தாக்கப் போவதாக செய்திகள் கேள்விப்பட்டபோது, கோட்டையின் பாதுகாப்பிற்கு தனக்கு உதவுமாறு ஆங்கிலேயர்களையும் போர்த்துகீசிய அதிகாரி துணைக்கு அழைத்தார். மங்களூரின் பாதுகாப்பின் முக்கிய தூணாகக் கிறிஸ்தவசமூக மக்களே விளங்கினர், கிறித்த சமூக மக்களின் அரசிற்கு எதிரான நிலைப்பாட்டால் ஹைதரின் முயற்சிகள் வீன்போகின எதிர்ப்பு அரண்கள் சுக்குநூறாக உடைந்தது, ஆங்கிலேயர்கள் எளிதில் கோட்டையையும் தொழிற்சாலையையும் கைப்பற்ற வழி வகுத்தது. ஆங்கிலேயர்கள் இலகுவாக தங்கள் இலக்கை அடைந்தனர்..
இந்த செயலால் ஹைதர் அலி கோபமடைந்தார். அவர் போர்த்துக்கீசியப் பாதிரியார்களை அழைத்து, இத்தகைய துரோகத்திற்கு என்ன தண்டனை தகுதியானது என்று கேள்வி எழுப்பினார்.காரணம் இக்கேரி மன்னர்களுடன் போர்துகிசியர்களின் ஒப்பந்தமும் அதை ஹைதர் உறுதி படுத்திய காரணத்தினாலும் போர்த்துகீசிய பாதரிகளை அழைத்து அவர்களிடமே கேட்டார்,
அரசனுக்குத் துரோகம் செய்வதற்கான தண்டனை மரணம் என்று பதிலளிக்கப்பட்டபோதும் , ஹைதர் அந்த நிலைபாட்டை எடுக்கவில்லை ,
அவர் கருணை காட்ட விரும்பினார் துரோகம் இளைத்தவர்களை சிறைக்குள் தள்ளினார். போர்த்துக்கீசியப் பதிவுகள் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறைவாசம் அனுபவித்த பாதிரியார்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. ஹொன்னாவரின் விகார் வரா-வான ஃபாதர் செபாஸ்டியன் டி ஃபாரியா, மற்றும் இரண்டு பாதிரியார்கள் உட்பட மேலும் ஐந்து நபர்கள் பிதனூர் கோட்டையில் அடைக்கப்பட்டனர்.
ஹைதர் ஆங்கிலேயர்களுடன் தன் கணக்குகளை முடித்துக்கொண்டவுடன், மறுபுறம் மராட்டிய படை முன்னெடுப்புகள் , இந்த புதிய ஆபத்தை எதிர்கொள்ளும்போது, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கனராபகுதியும் கனரா தனக்கு எதிராக செயல்பட்டதும் ,அடுத்ததாக மராத்தியர்கள் வாயிலாக எதிர்கொண்டிருக்கும் அச்சுறுதலும் கனரா மீதான போர்துகிசியர்களின் கடந்த கால மேலாதிக்கத்தை நீர்த்துபோக செய்யும் வகையில் தனது கட்டுபாட்டில் இருக்கும் கனரா பகுதியின் வளங்களை போர்த்துகீசியர்கள் கட்டுபடுத்துவதை தடுக்கும் வகையில் போர்த்துகீசியர் களுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினார்.
ஆங்கிலேயர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் வாயிலாக உண்மையில் ஹைதர் ராஜதந்திர ரீதியாக பெரும் வெற்றியை பெற்றார், ஆம் ஆங்கிலேயர்களுக்கும் ஹைதருக்கும் இடையிலான ஒப்பதங்களில் ஹைதரின் கரமே என்றும் ஓங்கியிருந்தது ஒவ்வொரு ஒப்பந்தமும் ஆங்கிலேயர்களுக்கு அவமான கரமாகவே அமைந்தது ,
இந்திய வரலாற்றில் ஒப்பந்தத்தின் சரத்துக்களை வடிவமைக்கும் தீர்மானிக்கும் வலிமையும் துணிவும் கொண்ட ஒரே மண்ணன் ஹைதர் என்றால் மிகையல்ல, ஆம் ஆங்கிலேயர்களை ஒரு அவமானகரமான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தார், மறுமுனையில் போர்த்துகீசியர்களுடனான பேச்சு வார்த்தையும் தொடர்ந்தது,
நடைபெற்ற யுத்த சூழலால். ஹைதரின் கட்டுப்பாடுகளால் போர்துகீசியர்களுக்கு கனராவிலிருந்து கிடைத்த அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகம் தடைப்பட்டதால் உணவு தட்டுபாடு தலைதூக்கிய நிலையில், போர்த்துக்கீசியர்கள் கனரா வாழ் உணவு உற்பத்தியாளர்களுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டனர் அதிக விலை கொடுத்து தானியங்களை உணவு பண்டங்களை விலைகொடுத்து வாங்கினர், ஹைதர் உடனான இறுதி ஒப்பந்தத்தில் இதுவே பிரதானமாக போர்துகிசியர்களால் முன்வைக்கப்பட்டது, உணவு தட்டுபாட்டை தவிர்க்கும் வண்ணம் கட்டுபாடுகள் தளர்வடைய செய்யவேண்டும், மேலும் பழைய படி போர்த்துகீசிய நலன்கள் பாதுகாக்க படவேண்டும், என்ற போர்த்துகிசியர்களின் வேண்டுகோளுக்கு ஹைதர் இசைவு தெரிவித்தார்,
உண்மையில் அத்தகைய சூழலில் ஆங்கிலேயர்களுக்கு முகம் கொடுத்துகொண்டிருந்தவர் போர்த்துகீசியர்களுடன் பகைமையை வளர்த்துகொள்ள விரும்பவில்லை, இந்த போருக்குள் போர்த்துகீசியர்களை இழுத்து விட்டதே, கர்னாடிக் பகுதியில் குறிப்பாக மெட்ராஸ் பகுதயில் ஆங்கிலேயர் பெற்ற பின்னடைவின் எதிரொலியாக ஒரு திசைதிருப்பும் நடவடிக்கையாகவே கனராவை ஆங்கிலேயர்கள் முற்றுகையிட்டனர் ஆகவே,
ஆங்கிலேயர்களின் சதியை முறியடித்து அவர்களை ஓர் அவமானகரமான ஒப்பந்தத்திற்குள் நிறுத்திய ஹைதர் போர்துகீசியர்களுடன் மிதமாகவே நடந்து கொண்டார்… பழைய படி போர்த்துகீசியர் களால் தொழிற்சாலை அதன் அனைத்து உரிமைகளுடன் மீட்டெடுக்கப்பட்டது, விகார்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் விடுவிக்கப்பட்டனர், மேலும் தேவாலயம்… நீதி விஷயங்களில் கிறிஸ்தவர்கள் மீதான அவர்களின் பழைய தடையற்ற அதிகாரம் அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு இரு சக்திகளுக்கும் இடையே மீண்டும் தொடங்கிய நட்புறவு 1776 வரை எந்தத் தடங்கலும் இல்லாமல் தொடர்ந்தது.
ஆங்கிலேயர்களுக்கும் போர்த்துகீசியர்களுகும் இடையிலான வியாபார உறவு கனரா மங்களூர் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதும் ஹைதர் அறிந்தேயிருந்தார் ,அது தான் கட்டமைத்துயிருக்கும் கப்பல் படையின் இஸ்திரதன்மைக்கு அட்சுருத்தலாக அமைவதையும் உணர்ந்த ஹைதர் மங்களூரின் போர்த்துகீசிய பொறுப்பாளரை கைது செய்து கோட்டையை கைப்பற்றினார், கடந்த முறை ஆங்கிலேயருடன் யுத்தத்தில்யிருந்த நேரத்தில் போர்த்துகீசியர்களுடன் மிதமான போக்கை கையாண்டவர், இம்முறை போர்ச்சுகீசியர்கள் தங்கள் வழக்கமான கப்பத்தையும் சுங்கவரியையும் வசூலிப்பதை விரும்பவில்லை , இது வரை கப்பமும் வரியும் வசூலித்து கொண்டு இக்கட்டான நேரத்திலும் தனது அரசிற்கு எந்த உதவியும் செய்யாத போர்த்துகிசீயர்களின் செயலற்ற தன்மையில் திருப்தி அடையவில்லை இனி தனது போர்களில் சேவை செய்வதற்காக ஆண்டுதோறும் அறுநூறு ஐரோப்பிய வீரர்களை வழங்க வேண்டும் என்று ஹைதர் விரும்பினார்.
போர்ச்சுகீசிய அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளுக்கு இணங்கத் தயக்கம் காட்டியது, மேலும் நான்கு ஆண்டுகள் நீடித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இனி எந்தவொரு எதிரியிடமிருந்தும் நகரத்தைப் பாதுகாப்பார்கள் என்ற நிபந்தனையின் பேரில், போர்ச்சுகீசியர்கள் எப்போதும்போல கப்பம் மற்றும் சுங்கவரியை வசூலிக்கவும், மங்களூரில் உள்ள தங்கள் தொழிற்சாலையைத் தொடர்ந்து வைத்திருக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், மதகுருமார்கள் தங்கள் மதச் செயல்பாடுகளை எந்தவிதத் தடையுமின்றி நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது….
1782-ல் தாங்கள் பெற்ற தோல்விக்கு கணக்கு தீர்க்கும் வாய்ப்பை ஆங்கிலேயர்கள் எதிர்கொண்டுயிருந்தனர் . , சில காலமாக உடல் நலம் குன்றியிருந்த ஹைதர் 1782 டிசம்பர் 7 அன்று காலமானார்; அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், ஒரு வாரத்திற்குப் பிறகு கனரா (Kanara) பகுதியில் தங்கள் படைகளை இறக்கினர். மேத்யூஸின் தலைமையின் கீழ், கார்வார் முதல் குந்தாபூர் வரையிலான கடற்கரைப் பகுதி முழுவதையும் ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். மேலும், திப்புவின் பணியாற்றிய ஷேக் ஹயாத்தின் உதவியால், அவர்கள் ராஜ்யத்தின் தலைநகரான ‘நகர்’ மற்றும் அரச துறைமுகமான மங்களூர் ஆகியவற்றையும் கைப்பற்றினர். இருப்பினும், ஆங்கிலேயர்களின் இந்த வெற்றி குறுகிய காலமே நீடித்தது; ஆங்கிலேயர் பெற்ற வெற்றியிகளிப்பில் கொல்லைகலயும் சூரையாடளிலும் ஈடுபட்டனர் என்கிறார் நேரில் கண்ட சாட்சியான ஃபாதர் ஜோவாகிம் மிராண்டா, குறிப்பிடுவது போல, அவர்கள் கொள்ளை மற்றும் சூறையாடலில் ஈடுபட்டிருந்த வேளையில், திப்பு தனது வலிமைமிக்க படையில் மூன்றில் ஒரு பகுதியினருடன் ‘அரியல்’ (Areal) பகுதியிலிருந்து விரைந்து வந்து, நகர் (பெட்னூர்) மற்றும் மங்களூர் உள்ளிட்ட பகுதி முழுவதையும் மீண்டும் கைப்பற்றினார். என பதிவு செய்கிறார்..
ஆங்கிலேயர்கள் கனராவில் தோல்வியடைந்த பிறகு , சில கிறித்தவ பெரும் வணிகர்கள் சமூக தலைவர்கள் ஆங்கிலேயர்களின் மீதான தங்கள் அதிகப்படியான ஈடுபாட்டால் முழு சமூகத்தின் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்தினர். ஆம் 1783 மே மாதம் மங்களூரிலிருந்து ஆங்கிலேய தலைமையகமான பம்பாய்க்கு எழுதிய கடிதத்தில் மேஜர் ஜான் கேம்பல் பின்வருமாறு தெரிவித்தார்:
முன்னர் பீரங்கிப் படையில் (Artillery) பணியாற்றிய பல உள்நாட்டு கிறிஸ்தவவீரர்கள் இங்கு உள்ளனர்; அவர்களில் 34 பேர் மீண்டும் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், ‘பம்பாய் நேட்டிவ்ஸ்’ படையில் என்சைனாக (Ensign) இருந்த ஃபிரான்சிஸ் பின்டோவுக்கும் மற்றும் சிலருக்கும் வேலை வழங்கி என்சைனுக்கான ஊதியமும் படியும் (batta) தருவதாக ஜெனரல் மேத்யூஸ் உறுதியளித்திருகிறார்( என்சையு என்பது அன்றைய பிரங்கி படையில் ஒரு பதவி) எனவே, அவரை அதே பதவி, ஊதியம் மற்றும் படிகளுடன் இவர்களை வழிநடத்த நான் நியமித்துள்ளேன்.” ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நீண்ட காலம் சிறைபிடிக்கப்பட்டிருந்த ஸ்கர்ரி என்பவரின் கூற்றும் இதனை உறுதிப்படுத்துகிறது; மேலும் ஜெனரல் மேத்யூஸ் 3,30,000 ரூபாய் கனரா வாழ் கிறித்தவ பெரும்வனிகர்களிடம் யிருந்து கடன் வாங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
திப்புவின் கோபத்தைத் தூண்ட இதுவே போதுமானதாகவும் இருந்தது. மங்களூரின் பாதுகாப்பைக் கைவிட்டு கனரா கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர்களின் சார்பு நிலை எடுத்ததாள் ஒரு ஆட்சியாளராக அவர் கடுமையாக நடவடிக்கைகளில் இறங்கினார், கிறித்தவ சமூகத்தின் ஆங்கிலேய சார்பு தான் மீட்ட பகுதியை ஆங்கிலேயர்கள் மீண்டும் கைப்பற்ற உதவியதாளும் இதற்க்கு சில கிறித்தவ மத குருமார்களும் பெரும் வணிகர்களும் துணையாகயிருந்திருகிரார்கள் இதுவே கடந்த முறை கனராபகுதியை ஆங்கிலேயர் கைப்பற்ற வழிவகுத்தது என குற்றம் சாட்டி. அவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனது பிரதேசத்திலிருந்து வெளியேற்றினார்.
இந்த காலகட்டமே திப்புவிற்கும் கிறித்தவ சமூகத்திற்கும் பெரும் முரணை ஏற்படுத்தியது எனலாம்
வரலாற்று ஆய்வாளர்கலில் சிலர் பெரும் எண்ணிகையிலான கிறிதவ மக்களின் இடப் பெயர்விற்கும் துன்புருதுதளுக்கும் ஆளாகினர் என்று எழுதுகிறார்கள், இன்னும் பலர் மிகைபப்டுத்தி எழுதுகிறார்கள் எனவே, தங்களது சொந்த அரசனுக்கு எதிராக ஆங்கிலேயர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்ட சில கிறிஸ்தவர்களின் செயலை நாம் முற்றிலும் கண்டித்தாலும், ஒரு சிலரின் குற்றங்களுக்காகக் அப்பகுதி கிறிஸ்தவச் சமூகம் முழுவதையும் தண்டனைக்கு உள்ளாக்கிய திப்புவின் செயல் எங்குமே நியாயப்படுத்த முடியாத ஒரு எதேச்சதிகாரப் போக்கு என வன்மையாக கண்டிக்கிரார்கள் ,
அதே வேளையில் கிறிஸ்தவ வரலாற்றாசிரியர் முஜாஃபர் அசாதி (Muzaffar Assadi), பணிக்கர் bittelberk, பெர்னாண்டஸ்,போன்றோர் இந்த நடவடிக்கைக்கு மதம் கரணம் அல்ல அரசியல் நிலைபாடே என புரிய வேண்டும் அரசியல் பின்னணியில் பார்க்கப்படவேண்டும் என்பதோடு திப்புவின் கடுமையான நடவடிக்கையை கண்டிகிரார்கள்,
தேவாலயங்களுக்கு திப்புவின் ஆதரவு
இந்து மத நிறுவனங்களைபோல், திப்பு தனது பிராந்தியம் முழுவதும் மசூதிகளுக்கும் கிறித்தவ தேவாலயங்களுக்கும் தனது அரசின் ஆதரவை நல்கினார் திப்பு குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்களுக்கு அவர் நல்கிய ஆதரவு குறைவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், அதுவும் அவரது பன்முகத்தன்மைக்கு சாட்சியாக உள்ளன.
.மைசூரில் உள்ள தேவாலயங்கள்
குறிப்பாக, மைசூரின் முதல் தேவாலயத்தைக் கட்டிய பெருமை திப்புவுக்கு உண்டு, இது கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கும் திப்பு நல்கிய உதவியை காட்டுகிறது (Assadi, 2015). பெரும்பான்மையான இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் வாழும் ஒரு பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலத்திற்கு அளிக்கப்பட்ட இந்த ஆதரவு, பன்முக சமூகத்தில் நிர்வாகம் பற்றிய திப்புவின் நடைமுறை சார்ந்த புரிதலைப் எடுத்துகாட்டுவதோடு. இந்தத் தேவாலயம் மைசூரின் கிறிஸ்தவ சமூகங்களுக்குச் சேவை செய்ததுடன் ஐரோப்பியயர்களுடன் நல்லுறவை பேணவும் உதவியது,
.திப்புவும் ஜெப ஆலயங்களும்
திப்பு சுல்தானுக்கும் மேற்கு இந்தியாவின் ஜெப ஆலயங்களுக்கும் இடையிலான தொடர்பு அரச ஆணைகள் அல்லது காலனித்துவப் பதிவுகளை விட இஸ்ரவேலர் சமூகத்தின் (Bene Israel) வாய்மொழி பாரம்பரியத்தில்தான் முக்கியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர்பு மறைமுகமானதாக இருந்தாலும், திப்புவின் அரசும் அது கடைபிடித்த மத கொள்கைகளின் வடிவங்களையும் அவரது ஆட்சியின் பன்முக பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது.
5.1 ஷா ஹரஹமிம் ஜெப ஆலயம், மும்பை
மும்பையில் உள்ள ஷா ஹரஹமிம் ஜெப ஆலயம் (Gate of Mercy) திப்பு சுல்தானுக்கும் சாமுவேல் எசிகிஎல் திவேகர் (சமாஜி ஹசாஜி திவேகர் என்றும் அழைக்கப்படுகிறார்) என்ற பனி இஸ்ரவேல் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த ஒரு சந்திப்பிணை குறித்தானது (DNA India, 2014; Weil, 2024).
பெனே இஸ்ரேல் சமூகத்தின் வாய்மொழி பாரம்பரியத்தின்படி, திவேகர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இராணுவத்தின் 6 வது படையில் தளபதியாக (சுபேதார்) பணியாற்றினார். ஆங்கிலேய-மைசூர் போர்களின் போது (குறிப்பாக 1780-1784 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் ஆங்கிலேய-மைசூர் போர்) அவர் திப்பு சுல்தானின் படைகளால் சிறைபிடிக்கப்பட்டார் பிடிக்கப்பட்டார் (Weil, 2024).
திப்பு சுல்தான் முன்பு கொண்டு வரப்பட்டபோது, திவேக்கரிடம் அவரின் மதம் குறித்தான கேள்வி அவையோரால் முன்வைக்கப்பட்டது,
அதற்கு அவர், “நான் ஒரு பணி இஸ்ரவேல் யூதன்” என்றார் (DNA India, 2014). திப்புவின் தாயார் பேகம் பாத்திமா ஃபக்ர்-உன்-நிசா இதைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. குர்ஆன் இஸ்ரவேலர்களை பற்றி பேசுகிறது, இவரும் இஸ்ரவேலர் சமூகத்தை சார்ந்தவர் ஆக இவரை மன்ணித்து விடுதலை வழங்க வேண்டும் என்று திப்புவிடம் வலியுறுத்த தாயின் சொல்லை தட்டாது திப்புவும் திவேகரை விடுவித்தார் (Weil, 2024).
திவேகர் பம்பாய்க்குத் திரும்பியதும் நன்றியுணர்ச்சியின் அடையாளமாக ஒரு ஜெப ஆலயத்தைக் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். அவர் 1796 ஆம் ஆண்டு தனது வேண்டுதலை நிறைவேற்றினார், திப்புவின் தாயார் பேகம் தன்மீது காட்டிய கருணையை நினைவுகூரும் வகையில் ‘ஷா ஹரஹமிம் ஜெப ஆலயம்’ கிருபையின்யின் வாயில்” என்று இன்றுவரை அறியப்படுகிறது (DNA India, 2014; Weil, 2024).
திப்புவின் வரலாற்றில் கிறித்தவ மக்களுடனான உறவு பல்வேறு கோணங்களில் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களால் பலவாறாக எழுதப்படுகிறது சில மிகைப்படுத்தி திப்புவை ஒரு மதவெறியராக கூட எழுதுகிறார்கள், நாம் வரலாற்றை பக்க சார்பற்று நியாய பூர்வமாக அணுகினால் இவை மத பின்னணியை கொண்டிருக்க வில்லை அரசியல் பின்னணியை அடிப்படையாக கொண்டவை என்பதை உணரலாம்
சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கும் விடுதலை போரின் வேள்விக்கும் விரகானவர்கள் கிறித்தவ மக்கள், அதே இந்திய சுதந்திரத்திற்காக தன் உயிரை நீத்தவர் திப்பு, ஆங்கிலேயர்களுக்கு எதிராக தனது ஆட்சிகாலத்தில் மூண்று பெரும் போர்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு நெருக்கடியான அடர்த்தியான காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் வழி மட்டும் கிறித்தவ சமூகத்திற்கும் திப்புவிற்குமான உறவை மதத்தின் அடிப்படையில் .. மதிப்பிடுவது அறிவார்ந்த செயல் அல்ல…
கனரா எனும் ஒரு குறுப்பிட்ட பகுதியில் நிகழ்ந்த ஒரு குறுபிட்ட நிகழ்வு ,மைசூரிலும் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த கிறித்தவ மக்கள் அமைதியுடனும் அபிவிருதியுடனுமே வாழ்ந்தனர் ஆக கனரா பகுதி கிறித்தவ மக்களுக்கும் திப்புவிற்குமான உறவை அக்கால யதார்த்தத்தின் வழி நாம் உற்று நோக்கினால் அக்கால யதார்த்தத்தின் வழி நின்ற ஒரு அரசியல் நிலைபாடு, அக்காலத்தின். யதார்த்தமோ- சுதந்திரம்.
துரை அப்பாஸ
